ETV Bharat / bharat

Leo first look: லியோன்னா சிங்கம் தானே... கழுதைப்புலி இருக்கு - என்ன சொல்ல வருகிறது லியோ ஃபர்ஸ்ட் லுக்! - வைரல்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'லியோ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான இன்று ( ஜூன் 22ஆம் தேதி) வெளியாகி சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

first-look-poster-of-lokesh-kanagarajs-leo-unveiled-on-vijays-49th-birthday
Leo first look: லியோன்னா சிங்கம் தானே... கழுதைப்புலி இருக்கு - என்ன சொல்ல வருகிறது லியோ ஃபர்ஸ்ட் லுக்!
author img

By

Published : Jun 22, 2023, 12:07 PM IST

ஹைதராபாத்: கோலிவுட்டில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் விஜய், இன்று ( ஜூன் 22), தனது 49-வது பிறந்தநாளை, மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார். விஜயின் பிறந்தநாள் என்றாலே, அவரது ரசிகர்களுக்கு எப்போதும் இன்ப அதிர்ச்சி காத்து இருக்கும். அந்தவகையில் விஜயின் 'லியோ' திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

வெற்றிப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்து உள்ளார். 'உங்களுடன் மீண்டும் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா' என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார், லோகேஷ் கனகராஜ்.

அப்படி என்னதான் இருக்கு: லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரத்தம் தெறிக்க, கையில் சுத்தியுடன் விஜய் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறார். பனி படர்ந்த மலைகளின் பின்னணியில் ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாது, In the WORLD Of Untamed Rivers, Calm Water Either Become Divine GOD or Dreaded DEMONS என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. "கட்டுக்கடங்காத நதிகளின் உலகில் அமைதியான நீர், தெய்வீகம் நிறைந்த கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக உருமாறும்" என்பது இதன் பொருள் ஆகும்.

அந்தவகையில் லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் போஸ்டரில் இருக்கும் சில விஷயங்களை நோட் செய்தீர்களா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அப்படி அந்த போஸ்டரில் நோட் செய்ய என்ன இருக்கு என்பதைப் பார்ப்போம்.. லியோ என்ற பெயர் சிங்கத்தை குறிக்கும்; ஆனால் இந்தப் போஸ்டரில் சிங்கத்திற்குப் பதிலாக கழுதைப் புலியின் உருவம் இடம்பெற்று உள்ளது. சொல்லப்போனால் காட்டில் சிங்கத்திற்கு மிகப்பெரிய எதிரியே இந்த கழுதைப்புலிகள் தான்.. சிங்கம் விஜய் ஆகவும், எதிரிகள் கழுதைப் புலிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக லியோ போஸ்டர் குறிப்பிட்டு உள்ளதாக, ட்விட்டர்வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் சுத்தியலை சுழற்ற, எதிரிகளின் ரத்தம் தெறிக்க, பற்கள் பறக்க என்று செம அதிரடியாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சமீபகாலமாக விஜய்யின் சில படங்கள் வசூலில் சாதனை படைத்தாலும் விமர்சனம் ரீதியாக சோதனையாகவே அமைந்திருந்தது, அந்தவகையில் லியோ திரைப்படமாவது விஜய்க்கு கைக்கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் இன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயின் அரசியல் வருகையை எதிர்பார்க்கிறதா தமிழ்நாடு? - பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.