ETV Bharat / bharat

உ.பி. அலிகார் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு? போலீசார் தீவிர விசாரணை!

அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படும் சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

firing-incident-at-aligarh-muslim-university-leaves-student-injured
உபி யில் பயங்கரம்... அலிகார் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு...மாணவர் படுகாயம்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 2:35 PM IST

உத்திரபிரதேசம்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேற்று (நவ. 3) அதிகாலை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் ரெஹான் என்ற மாணவர் பலத்த காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் 100 வருடம் பழைமையான அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் (Aligarh Muslim University) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (நவ. 3) அதிகாலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நார்த் ஹாஸ்டலில் மாணவர்கள் சாப்பிடுவதற்காக உணவக விடுதிக்குச் சென்ற போது, அடையாளாம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மாணவன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவன் மொராதாபாத்தில் உள்ள ஜெய்த்வாராவைச் சேர்ந்த ரெஹான் என தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். இதனைக் கடுமையாக விமர்சித்து பாஜகவைச் சேர்ந்த தாகூர் ரகுராஜ் சிங் என்பவர் ஒரு அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் தேசத்தின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த அறிக்கை வெளியான சில நாட்களில் இச்சம்பம் நடந்துள்ளதாக மாணவர் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நேற்று (நவ. 3) நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படும் சம்பவம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "மழை என்றதுமே வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறிவிட்டது" - மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.