ETV Bharat / bharat

Falaknuma Express : தெலங்கானாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தீக்கிரை - உயிர்ச்சேதம் இல்லை - bogies

ஹவுரா-செகந்திராபாத் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் இருந்த நான்கு பெட்டிகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இருப்பினும், தீப்பற்றி எரிவதைக் கண்ட பயணிகள் ,பெட்டிகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது

Fire in Falaknuma Express.. Two bogies burnt
தெலங்கானாவில் தீக்கிரையான ரயில் பெட்டிகளால் பரபரப்பு - உயிர்ச்சேதம் தவிர்ப்பு!
author img

By

Published : Jul 7, 2023, 12:21 PM IST

Updated : Jul 7, 2023, 3:34 PM IST

Falaknuma Express : தெலங்கானாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தீக்கிரை - உயிர்ச்சேதம் இல்லை1

ஹைதராபாத் (தெலங்கானா): செகந்திராபாத் செல்லும் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் மின்கசிவு காரணமாக, ஏற்பட்ட தீ மளமளவென்று பரவியது. நான்கு பெட்டிகள் தீயில் முழுவதுமாக சேதம் அடைந்தன. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியது. ரயில்வே அதிகாரிகள் உரிய நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, பயணிகளை விரைவாக வெளியேற்றியதால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தெலங்கானா மாநிலம், யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பகிடிப்பள்ளி மற்றும் பொம்மைப்பள்ளி இடையே இந்தச் சம்பவம் நடந்து உள்ளது. உஷாரான அதிகாரிகள், விரைவாகவும், துரிதமாகவும் மேற்கொண்ட நடவடிக்கைகளால், ரயில் உடனடியாக, அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில், அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளின் காரணமாக, உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. தீயினால் நான்கு பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • #WATCH | Telangana | Fire broke out on three coaches of Falaknuma Express between Bommaipally and Pagidipally, following which it was stopped. All passengers deboarded the train, no injuries reported. pic.twitter.com/QfOkvrOAST

    — ANI (@ANI) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உடனடி தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மின்கசிவுக்கான காரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஹவுராவில் இருந்து புறப்பட்ட ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில், அதன் இலக்கை அடையும் கடைசிக் கட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் முற்றிலும் எரிந்த நிலையில், அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளால், பயணிகள் எவ்வித தீக்காயங்களும் இல்லாமல், அதிசயமாக உயிர் தப்பி உள்ளனர். 4 பெட்டிகள் தீக்கிரை ஆகி உள்ள நிலையில், மேலும் 2 பெட்டிகளுக்கு, தீ பரவியதாக, ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Rahul Gandhi: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மீதான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

Last Updated : Jul 7, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.