தானே (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் இந்து மதத்தின் ஆச்சாரம் பற்றிய பாரம்பரிய கருத்துகளுக்கு சவால் விடும் வகையில், பெண் அர்ச்சகர்கள் தானாகசே முன் வந்து அனைத்து வகையான பூஜையும் முன்னின்று நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகொன்றனர்.
பெண் அர்ச்சகர்கள் அனைத்து வகையான சடங்குகளையும் செய்கின்றனர். உதாரணமாக பெயர் சூட்டு விழாக்கள், திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் மற்றும் திருவிழா காலங்களில் கோயில்களில் நடத்தப்படும் பூஜைகளுக்கும் இவர்கள் அர்ச்சனை செய்கின்றனர். இதனை தானேவில் உள்ள மூத்த பெண் அர்ச்சகரான வீணா மோடக் முதன் முதலாக தொடங்கினார்.
பழங்கால ஆண் அர்ச்சகர்களின் பாரம்பரியத்தை உடைத்து, படிப்படியாக கணபதி பூஜை, மங்கள கவுரி பூஜை, லகு ருத்ரா மற்றும் சத்யநாராயண பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் பூஜை செய்ய அவருக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன. இது குறித்து அவர் கூறுகையில் "பூஜையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்கி முழு பூஜையையும் முடிக்க குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும். நாங்கள் பூஜைக்கு அழைப்பவர்களையும் இதில் ஈடுபடுத்த முயற்சிக்கிறோம். எனவே நாங்கள் இளம் தலைமுறையினரிடையே பிரபலமாக இருக்கிறோம். " என்று வீணா மோதக் கூறினார்.
ராஷ்டிர சேவிகா சமிதி சார்பில் 1994-95 ஆண்டில் பிராமண சேவா சங்கத்தில் வீணை மோதக் வழிகாட்டுதலின் கீழ் பெண்கள் அர்ச்சகர் படிப்பு தொடங்கப்பட்டு 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்போது, 40 பெண்கள் இந்தப் அர்ச்சகர் படிப்பில் சேர்ந்துள்ளனர். நான்காண்டு படிப்புக்கு புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களிடையே உற்சாகத்தை காண முடிகிறது.
ராஷ்டிர சேவிகா சமிதியின் கீழ் பயிற்சி வரும் பெண் அர்ச்சகர் ஸ்வாதி தியோதர் கூறுகையில், புரோகிதம் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகும், ஆனால் வேதத்தை உச்சரித்து, பக்தியுடன் வணங்கும் மக்களுக்கு பூஜையின் முலம் நிம்மதியைத் தருவது முக்கியம்’ எனத் தெரிவித்தார்.
பெண் அர்ச்சகர்களுக்கு தற்போது அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அனைத்து பூஜைகளுக்கும் இவர்களையே அழைக்கிறார்கள். பூஜைக்கு தேவையான பொருட்கள் இப்போது தானேயில் ஒரே இடத்தில் கிடைக்கிறது. இங்குள்ள கந்தாலி சௌக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரம்பரோஸ் அகர்பத்தி எனத் தொடங்கிய இந்த வணிகம் தற்போது ஆல்-இன்-ஒன் கடையாக மாறியுள்ளது.
இங்கு தானே நகர மக்களின் பதிலைக் கருத்தில் கொண்டு, சத்யநாராயண பூஜைக்காக இரண்டு வகையான பொட்டலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தொகுப்பில் வாழைத்தண்டு, மூன்று தேங்காய், ஆயிரம் துளசி இலை, ஐந்து பழங்கள், இலைகள் போன்ற முழுமையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, ஷ்ராவண மாதத்தில் சத்தியநாராயணன் பூஜைக்காக கிட்டத்தட்ட 70 முழுமையான தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இந்து மதத்தில் இருக்கும் பழமையான சாஸ்திர சம்பிராதயங்களை உடைத்து தற்போது பெண்களும் இதில் ஈடுபடுவது அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்... உ.பி. இளைஞர் அசத்தல்...