பெங்களூரு: கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி பிடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் கோழிக்கடையில் வேலை செய்து வந்தார். மஞ்சுநாத்திற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களும் காதலித்து வந்தனர். கடந்த செவ்வாய்கிழமை தனது இளைய மகளின் காதல் விவகாரம் மஞ்சுநாத்திற்கு தெரியவந்தது.
தொடர்ந்து, மஞ்சுநாத்தின் இளைய மகளும் அவரது காதலனும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு, மஞ்சுநாத்தின் இளைய மகள் தனது காதலனுடன் செல்வதாக காவல் நிலையத்தில் கூறியுள்ளார். தொடர்ந்து, மஞ்சுநாத்தின் இளைய மகளை காவல் துறையினர் ஆறுதல் மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மஞ்சுநாத்தின் மூத்த மகள் கவானா (20) காதல் விவகாரமும் அவருக்கு தெரியவந்தது. இதனால், நேற்று இரவு தந்தை மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தனது இரண்டு மகள்களும் காதலிப்பதால் கௌரப் பிரச்னைக் காரணமாக ஆத்திரத்தில் மஞ்சுநாத் மூத்த மகள் கவானாவை கோழி வெட்டும் கத்தியை வைத்து வெட்டிக் கொலை செய்தார்.
தொடர்ந்து அவர் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இதனையடுத்து, விஸ்வநாத்பூர் காவல் துறையினர் சம்வவ இடத்திற்குச் சென்று மஞ்சுநாத்தின் மூத்த மகளின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மஞ்சநாத் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!