ETV Bharat / bharat

அசாமில் மகள் இறந்த வழக்கில் தந்தை உட்பட 5 பேர் கைது - crime news

அசாம் மாநிலத்தில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்து கரும்பு தோட்டத்தில் புதைக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் மகள் இறந்த வழக்கில் தந்தை உட்பட 5 பேர் கைது

author img

By

Published : Sep 23, 2022, 9:59 AM IST

திபு: அசாம் மாநிலத்தில் 16 வயது சிறுமியின் மர்ம மரணத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் தந்தை உட்பட குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கர்பி ஆங்லாங் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார், ஆகையால் கருவை கலைக்க உள்ளூர் மருந்தகத்தில் ஊசி போட்டுக்கொண்ட காரணத்தால் உயிரிழந்துள்ளார்.

கரும்பு தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த அந்த சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் 5 மாத கர்ப்பத்தைக் கலைக்க ஊசி போட்ட மருந்தாளுநர் சியாராம் யாதவ் ராயை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் உறவினர்கள் நந்த்லால் மற்றும் சுமந்த் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தந்தையே ஒப்புக்கொண்டதால் சிறுமியின் தந்தை அங்கத் சிங்கை காவல்துறியினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய மனைவி? - திடுக்கிடும் பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.