ஜெய்பூர்: உருமாறிய கரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று தற்போது உலகின் பல நாடுகளில் பரவிவருகிறது. இந்தியாவில் முதன்முறையாக நேற்று (டிசம்பர் 2) கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து ராஜஸ்தான் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகவில்லை. அவர்களின் மாதிரிகள் தற்போது மரபணு வரிசைப்படுத்துதல் (Genomic Sequencing) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!