ETV Bharat / bharat

'மத்திய அரசின் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்புங்க' எனப்பேசி மோசடி செய்த போலி ஆசாமி கைது! - சென்னை சேர்ந்த பருப்பு வியாபாரி பாலாஜி என்பவர் கொடுத்த புகார்

மத்திய அரசின் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதாகக் கூறி பல பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் பொருட்களை வாங்கி மோசடி செய்த போலி மத்திய அரசு திட்ட இயக்குநர் டெல்லியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Fake Central government project director arrested in Delhi

author img

By

Published : Jun 27, 2022, 3:25 PM IST

டெல்லி: 'கிஷன் ரேஷன் ஷாப்' என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதாகவும், அத்திட்டத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாகிகள் எனக்கூறி கும்பல் ஒன்று நூற்றுக்கணக்கான பேரை கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது.

இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட ஜெய்கணேஷ் என்ற போலி மத்திய அரசு திட்ட இயக்குநரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். மத்திய அரசின் ரேஷன் கடைகளுக்குப் பொருட்களை கொள்முதல் செய்வதாகக் கூறி மோசடி செய்ததாக, சென்னையைச் சேர்ந்த பருப்பு வியாபாரி பாலாஜி என்பவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி பாண்டியராஜன் என்ற இடைத்தரகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கும்பலைச் சேர்ந்த மீதமுள்ள நபர்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 13ஆவது திருமணம் செய்ய முயற்சித்த மோசடி ஆசாமி கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.