டெல்லி: மத்திய பட்ஜெட்டில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், இருப்பிடம், குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் நிதி, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைவிட ஐந்து மடங்கு அதிகம் என தெரிகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில், பழங்குடியின மாணவர்களுக்கான ஏகலைவா மாடல் உண்டு உறைவிடப் பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமரின் 'விஸ்வகர்மா கௌசல் விகாஷ்' திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஒடிஷா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களை கவரும் வகையில் அவர்களது மேம்பாட்டுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Budget 2023: வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க கடன் திட்டம்!