ETV Bharat / bharat

"ராகுல் காந்தி, இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகவே இருக்கும்" - எதிர்க்கட்சி எம்பிக்கள் - ராகுல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் என்று கூறிய எதிர்க்கட்சி மூத்த தலைவர்கள், ராகுல் காந்தி இல்லாவிட்டாலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எழுதுகிறார் ஈடிவி பாரத் ஊடகத்தின் கௌதம் டெப்ராய்.

Even without Rahul entire opposition will remain united: Opposition MPs

author img

By

Published : Mar 27, 2023, 10:06 PM IST

டெல்லி: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகித்து வந்திருந்தாலும், அவர் இல்லாதது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு இடையூறாக இருக்காது என்று திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜவஹர் சிர்கார் கூறுகையில், "இதுபோன்ற தகுதி நீக்க சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் ராகுல் காந்தி முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அவர் இல்லாதது எங்களது ஒற்றுமைக்கு இடையூறை ஏற்படுத்தாது. எதிர்க்கட்சிகளின் எந்த கோரிக்கைகளை பற்றியும் விவாதிக்க, ஆளும் கட்சி ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும் தகுதி நீக்கத்தை கண்டித்து தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.

இதே கருத்தையே பாரத ராஷ்டிர சமிதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கேசவ ராவ்வும் தெரிவிக்கிறார். அவர் கூறுகையில், "ராகுல் காந்தி இல்லாத போதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. எங்களுக்கு காங்கிரஸ் காட்சி உடன் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், நாட்டில் ஜனநாயகம் பறிக்கப்படும்போது, ஒற்றுமை பலத்துடன் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளோம். காங்கிரஸ் முகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

மோடி என்பது சமூகத்தின் பெயராக இருந்தாலும், ராகுல் காந்தி மோடியை விமர்சித்தது ஒரு சமூகத்தை விமர்சித்ததாக நாம் கருதக்கூடாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால், பாஜக அரசு எதிர்க்கட்சிகளை அழிக்கவும், கருத்து தெரிவிக்காமல் கட்டுப்படுத்தவும் பாசிச கொள்கையை கடைபிடித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

நொண்டி சாக்கு சொல்லி மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ராகுல் நொண்டி சாக்கு சொல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கேலிக்கூத்தானது. இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் கூறுகையில், நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதை ஒட்டுமொத்த தேசமும் கண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை.

அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியின் உரை நீக்கப்பட்டுவிட்டது. சொல்லப்போனால், ஜனநாயகத்தின் மிகப்பெரிய சவாலை நாடாளுமன்றம் எதிர்கொண்டுவருகிறது" எனத் தெரிவித்தார். சூரத் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தி, மின்னல் வேகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் ஒரு கருப்பு பக்கமாகும்.

ஆகவே, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகவும், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரம் தொடர்பாகவும் எங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரட்டாஸ் தெரிவித்தார். இதுபோல அனைத்து எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்தியின் வெற்றிடம் குறித்து கவலைக் கொள்ளுவதாக தெரியவில்லை என்றாலும் அவருக்காக குரல் கொடுப்பதையும் கைவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.