ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - etvbharat tamil news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

9AM
9AM
author img

By

Published : Sep 28, 2021, 9:12 AM IST

1. 'பாரத் பந்த் தமிழ்நாட்டில் படுதோல்வி'

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் முழு அடைப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் படுதோல்வியடைந்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2. ‘ருத்ர தாண்டவம்’ படத்தைப் புகழ்ந்த அர்ஜுன் சம்பத், கிருஷ்ணசாமி

சாதி, மதத்தைத் தூண்டுகின்ற படம் ‘ருத்ர தாண்டவம்’ அல்ல என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளனர்.

3. 'அனுமதியின்றி பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும்’

தேர்தல் நேரத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல்செய்யப்படும் எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

4. மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம் - போலீஸ் தீவிர விசாரணை

சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்து இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர் மாயமான விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5. 2ஆவது தவணை; கோவிஷீல்டுக்குப் பதிலாக கோவாக்சின்...!

புற்றுநோயாளி ஒருவர் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின், 2ஆவது தவணை தடுப்பூசியாக கோவாக்சினைச் செலுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. முதலமைச்சர் வீட்டருகே தீக்குளித்தவரை காப்பாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

முதலமைச்சர் வீட்டின் அருகே தீக்குளித்த நபரைச் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றிய காவலர்களை சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

7. தமிழ்நாட்டுக்கு 37.5 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 37.5 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

8. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்து ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

9. விஜய்யுடன் பணியாற்றுவது எனக்குப் புது அனுபவம் - இயக்குநர் வம்சி

தமிழில் முன்னணி நட்சத்திரமான விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்குவது எனக்கு புது அனுபவம் என இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.

10. இரண்டு மாநிலங்களை உலுக்கிய குலாப் புயல்...!

குலாப் புயலால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.