ETV Bharat / bharat

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

7AM
7AM
author img

By

Published : Oct 27, 2021, 7:36 AM IST

1. 'அவரை நடிக்கச்சொன்னது நான்தான்' - ரஜினியின் நிஜ வாழ்வு 'தேவா' ராஜ் பகதூர் பெருமிதம்

ரஜினியின் நடிப்பு திறமையைக் கண்டு, சென்னையில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு சென்று பயிலும்படி நான்தான் கூறினேன் என்று ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் கூறியுள்ளார்.

2. பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது மீண்டும் பாயும் குண்டர் சட்டம்

சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

3. தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின்

சங்கராபுரத்தில் இன்று மாலை பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

4. சொத்துக்காக பெற்றோர் கொலை - மகனுக்கு தூக்குத் தண்டனை

திண்டிவனத்தில் சொத்துக்காக சொந்த குடும்பத்தைக் கொலை செய்த வழக்கில், தம்பதிக்கு தூக்குத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. மகளுக்கு தாய் பெயரை இனிஷியலாக வைக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி

தனது பெயரின் முதல் எழுத்தை மகளின் இனிஷியலாக பயன்படுத்த அனுமதிக்கக் கோரி தாய் அளித்த மனுவுக்கு 30 நாள்களுக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

6. இரும்பு கதவில் சிக்கிய நாய் - 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு

கோயம்புத்தூரில் வீட்டின் இரும்புக் கதவில் சிக்கிய நாயை தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.

7. பேரனுடன் விளையாடி மகிழ்ந்த புதுச்சேரி முதலமைச்சர்!

முதலமைச்சர் ரங்கசாமி தனது பேரனுடன் உற்சாகமாக விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

8. பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றதை, காஷ்மீரில் சில கல்லூரி மாணவர்கள் கொண்டாடியதுடன், இந்திய நாட்டிற்கு எதிரான முழுக்கத்தையும் எழுப்பியதாக குற்றஞ்சாட்டு எழுந்த நிலையில், அவர்கள் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9. ரூ.100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இதுவரை 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10. T20 WORLDCUP: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில், மேற்கு இந்திய தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.