ETV Bharat / bharat

டெல்லி மதுபான ஊழல் வழக்கு... ஐதராபாத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை - டெல்லி மதுபான ஊழல்

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் 25 குழுக்களாக ஐதராபாத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஐதராபாத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

author img

By

Published : Sep 16, 2022, 11:33 AM IST

Updated : Sep 16, 2022, 11:45 AM IST

ஐதராபாத்: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை ஐதராபாத்தில் மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. நகரில் ராயதுர்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தினர்.

முன்னதாக, கோகாபேட்டில் உள்ள ராமச்சந்திர பிள்ளையின் வீடு மற்றும் நானக்ராம்குடாவில் உள்ள ராபின் டிஸ்டில்லரீஸ் அலுவலகங்களில் ED சோதனை நடத்தியது. ராமச்சந்திர பிள்ளை ராபின் டிஸ்டில்லரீஸ் மற்றும் ராபின் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் எல்.எல்.பி என்ற பெயரில் நிறுவனங்களை நிர்வகித்தார்.

அவர் தனது நிறுவனத்தின் இயக்குநர்களாக அபிஷேக் போயின்பாலி மற்றும் கந்த்ரா பிரேம்சாகர் ராவ் ஆகியோரை நியமித்தார். இந்நிலையில், ஐதராபாத்தில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஆனால் இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: டெல்லி மதுபான ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை... கேசிஆர் மகள் கவிதா விளக்கம்...

Last Updated : Sep 16, 2022, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.