ETV Bharat / bharat

ஜார்க்கண்ட்டில் யானை தாக்கி 14 பேர் உயிரிழப்பு - 144 தடை உத்தரவு அமல்! - 144 applied in ranchi

ஜார்க்கண்ட்டில் காட்டு யானை தாக்கியதால் 14 பேர் உயிரிழந்த நிலையில், அங்குள்ள இட்கி பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜார்கண்ட்டில் யானை தாக்கி 14 பேர் உயிரிழப்பு - 144 தடை உத்தரவு அமல்!

author img

By

Published : Feb 22, 2023, 8:59 AM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று (பிப்.21) மதியம் வரை 14 பேர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஷசீகர் சமந்தா கூறுகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹஜாரிபாக்கில் ஒரே யானை தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவை அருகில் உள்ள சாத்ரா வனப் பகுதியில் இருந்து வந்ததாகவும் கூறினார்.

மேலும் இட்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் 4 பேர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் ஹஜாரிபாக், சத்ரா, லடேஹர், லொஹார்டகா மற்றும் ராஞ்சி ஆகியப் பகுதிகளில் மொத்தமாக 14 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில், இட்கி பகுதிக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேநேரம் இந்த தடை உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்றுமாறும், மீறினால் நடவடிக்கை எடுக்கவும் ராஞ்சி வனத்துறையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பொதுவாகவே, யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வரும் ஒற்றை யானையால் என்ன செய்வதென்று தெரியாமல் குடியிருப்புக்குள் நுழையும் என்றும், அதனை பொதுமக்கள் கற்களால் அடித்து துன்புறுத்துவதால் யானைக்கு கோபம் அதிகமாக வரும் எனவும் வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த யானையின் தாக்குதலுக்கு காரணாம் என்னவென்று அறிய முடியவில்லை எனவும் வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போதைய சூழலில் பயிற்சி பெற்ற வனத்துறையினர் களத்தில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் கும்கி யானையை இறக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஷசீகர் சமந்தா கூறினார்.

ஆனால், ஜார்க்கண்ட்டில் கும்கி யானைகள் இல்லாததால், அவைகளை அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்துதான் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு கும்கி யானைகளை களம் இறக்குவது பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட வன அதிகாரி ஸ்ரீகாந்த் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை யானையிடம் இருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில வனத்துறையினர் சில்லி பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தாக்குதல் நடத்தும் யானை இளம் வயதைச் சேர்ந்தது எனவும், அது 25 கிலோ மீட்டர் வேகத்தில் இடம் பெயர்வதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Video: கோவை வால்பாறையில் வலம் காட்டு யானைகள் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.