ETV Bharat / bharat

கரோனா: சபரிமலையில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! - Covid-19 infection

திருவனந்தபுரம்: கார்த்திகை மகரஜோதி மண்டல பூஜைக்காக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், சபரிமலைக்கு கரோனா நோயாளிகள் வராமல் இருக்க விரிவான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலை
சபரிமலை
author img

By

Published : Nov 14, 2020, 6:29 PM IST

Updated : Nov 14, 2020, 7:02 PM IST

பதனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐய்யப்பா கோயிலில் இரண்டு மாத கால வருடாந்திர மண்டலம்-மகரவிளக்கு பருவ பூஜை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும்.

இந்நிலையில் சபரிமலை கோயிலில் நேற்று (நவ. 14) நடந்த இறுதி ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய நடந்த உயர் மட்ட அலுவலர்களின் கூட்டத்திற்குப் பிறகு, தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், “இந்த முழு புனித யாத்திரையும் இம்முறை மெய்நிகர் வரிசை முறையின் மூலமாகவே இருக்கும். எனவே வழக்கமான கடும் அவசரத்தைக் கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

தற்போது கரோனா தொற்றுநோயை அடுத்து ஒரு சுமுகமான யாத்திரையை உறுதிசெய்ய அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சுரேந்திரன் விவரித்தது பின்வருமாறு:

ஒவ்வொரு பக்தரும், சன்னதிக்கு வருகை தரும்போது 24 மணி நேரத்திற்குள் கோவிட் சான்றிதழை (நெகட்டிவ் ஆக இருந்தால் மட்டும்) எடுத்துச் செல்ல வேண்டும்.

மலையேற்றத்தைத் தொடங்குவதற்கு முன் பக்தர்கள் சோதனையை மேற்கொள்ள உதவும் வகையில், அடிப்படை முகாம்களான பம்பா மற்றும் நிலக்கல் பகுதிகளில் கோவிட்-19 சோதனை முகாம்கள் திறக்கப்படும்.

இது தவிர, திருவனந்தபுரம், திருவல்லா, செங்கண்ணூர், கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட பல்வேறு மையங்களில் ஆன்டிஜென் பரிசோதனைகள் செய்ய சுகாதாரத் துறையால் ஏற்பாடுகள் செய்யப்படும்.

பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும்போது சமூக இடைவெளியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக, ஒவ்வொரு பக்தருக்கும் குறிப்பிட்ட இடம் குறிக்கப்படும். 60-65 வயதுக்குள்பட்டவர்கள் மருத்துவ உடற்தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

பக்தர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை செய்கையில், அவை நெகட்டிவ் ஆக மாறும் வரை, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட, அனைவருக்கும் போதுமான சிகிச்சை அளிக்கப்படும். பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியும்.

ஆம்புலன்ஸ் வசதி உள்பட அனைத்து ஏற்பாடுகளும் பதனம்திட்டா மற்றும் கோட்டயம் அரசு அரசு கல்லூரிகளிலும், இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மலையேறும் போது பக்தர்களுக்கு முகக் கவசம் கட்டாயமில்லை, ஏனென்றால் அதிக உடல் செயல்பாடுகளின் போது விலக்கு அளிக்கும் நெறிமுறையின்படி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் கடுமையான கோவிட் நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை தூக்கி எறியக்கூடாது. அதைச் சேகரித்து மறுசுழற்சி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Last Updated : Nov 14, 2020, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.