ETV Bharat / bharat

புதுவை பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு.. கோடை விடுமுறையை அறிவித்த அமைச்சர்! - Puducherry summer vacation

புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெயிலின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக முன்கூட்டியே தேர்வு நடத்தப்பட்டு ஏப்ரல் 20 முதல் கோடை விடுமுறை விடப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Day by day the effects of heat increase... so the annual exam for school students conducted earlie
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு..பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு
author img

By

Published : Apr 7, 2023, 7:27 PM IST

அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்கள் சந்திப்பு

புதுச்சேரி: இந்தியா முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உடனான ஆலோசனை கூட்டம், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் காணொளி காட்சிகள் மூலம் நடைபெற்றது.

இதில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீ ராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், காணொளி காட்சிகள் மூலம் மாநிலத்தில் கரோனா தொற்று குறித்தும், மாநிலத்தில் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2022- 2023-ஆம் கல்வி ஆண்டுக்கான ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை 24.04.2023-ஆம் தேதி தொடங்கி, 28.04.2023 வரை நடைபெறுவதாக கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்டு அதன் சுற்றறிக்கை 02.03.2023 அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதனாலும், மேலும் காவலர் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகள் இன்னும் நடத்தப்பட உள்ளதாலும் தேர்வு அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வானது, முன்னதாக தொடங்கி நடைபெறும் வகையில் தேர்வு அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 11.04.2023 முதல் தேர்வுகள் தொடங்கி 19.04.2023 வரை தேர்வு நடைபெறும் என்றும், மேலும் 20.04.2023 முதல் 31.05.2023 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும், இது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும்" எனவும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: போக்குவரத்தில் பல்வேறு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.