ETV Bharat / bharat

ட்ரோன் மூலம் மருந்துப்பொருட்கள் டெலிவரி - டாடாவின் திட்டம் தொடக்கம் - ட்ரோன் மூலம் சப்ளை

போக்குவரத்து நெரிசல், நேர விரயம் உள்ளிட்டவைகளைத் தவிர்க்க உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ட்ரோன் மூலம் மருந்துப்பொருட்கள் டெலிவரி செய்யும் திட்டத்தை டாடா 1 எம்.ஜி நிறுவனம் தொடங்கி உள்ளது.

ட்ரோன்
ட்ரோன்
author img

By

Published : Dec 6, 2022, 6:31 PM IST

டேராடூன்(உத்தரகாண்ட்): டிஜிட்டல் மருந்து சப்ளை நிறுவனமான டாடா 1 எம்.ஜி, ட்ரோன் மூலம் மருந்துப் பொருட்கள் டெலிவரி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், ட்ரோன் மூலம் மருந்துப்பொருட்கள் டெலிவரி செய்யும் முறையை டாடா 1எம்.ஜி நிறுவனம் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. ட்ரோன்கள் மூலம் மருந்துப்பொருட்கள் டெலிவரி செய்வதால் வீண் அலைச்சல், நேர விரயம், டிராஃபிக் ஜாம் உள்ளிட்டவைகளைத் தவிர்க்க முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் ட்ரோன் மூலம் மருந்துப் பொருட்களை டெலிவரி சேவையை தொடங்க உள்ளதாகவும், படிப்படியாக மாநிலம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர்.

மருந்துப்பொருட்களை எளிதில் கொண்டு செல்லும் வகையில், ரேஸ்கோர்ஸ், வாசஸ்த் விகார், கிருஷ்ணா நகர் உள்ளிட்டப்பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரே நேரத்தில் 6 கிலோ வரை மருந்துப்பொருட்கள் டெலிவரி செய்யத்திட்டமிட்டு உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அம்பேத்கருக்கு மாலை போடுவதில் பிரச்னை - பா.ஜ.க., வி.சி.க. தொண்டர்கள் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.