ETV Bharat / bharat

MP Train Accident: மத்தியபிரதேசத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! - MP Train Accident

மத்திய பிரதேச மாநிலம், ஷாதோல்(shahdol) பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

Driver
ஷாதோல்
author img

By

Published : Apr 19, 2023, 12:09 PM IST

மத்தியபிரதேசம்: மத்தியபிரதேச மாநிலம், ஷாதோல்(Shahdol) பகுதியில் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இன்று(ஏப்.19) இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரண்டு ரயில்களின் எஞ்சின்களும் தீப்பற்றி எரிந்தன. இதனால் ரயில் பெட்டிகளும் தீப்பற்றி எரியத் தொடங்கின.

இந்த கோர விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்ததாக தெரிகிறது. ரயில்வே ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  • #WATCH | Shahdol, MP: Two goods trains collided with each other near Singhpur railway station. The engines of the trains caught fire after the collision. The drivers have been injured, and two railway workers feared trapped. pic.twitter.com/3cEyCfA7xP

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் பலர் இந்த விபத்தில் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதனால், மீட்புப் படையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, பிலாஸ்பூர் - கட்னி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Khalistan: லண்டனில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு - என்.ஐ.ஏ. விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.