புதுச்சேரியில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக உழவர்கரை தொகுதிக்குள்பட்ட பூமியாம்பேட்டை முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளது.
இப்பகுதியினை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், துணை சபாநாயகருமான பாலன் பார்வையிட்டு மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவை உறுப்பினருக்கான மேம்பாட்டு நிதி ஒரு கோடி ரூபாய் மட்டுமே வழங்குவதால் இதுபோன்ற பேரிடர் காலத்தில் நிவாரண பணிகளுக்கும் மழைநீரை அகற்றுவதற்கும் நிதி போதவில்லை.
ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வேடிக்கை பார்த்தவிட்டு, புகைப்படம் எடுக்கிறார்களே தவிர நீண்டகாலம் நடவடிக்கையில் இறங்குவதில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: ’விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார் மோடி’-நாராயணசாமி!