ETV Bharat / bharat

நடுரோட்டில் எம்எல்ஏவுடன் வாக்குவாதம் செய்த மகள் - தெலங்கானாவில் நடந்தது என்ன? - முதலமைச்சர்

தனது கையெழுத்தை போலியாகப் போட்டு புதிதாக நிலத்தை பதிவு செய்துள்ளதாகக் கூறி, எம்எல்ஏ உடன், அவரது மகள் வாக்குவாதம் செய்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Daughter slams Telangana MLA for forging her signature and getting land registered
தந்தையே, என்ன இது அநியாயம்! - போலியாக தன் கையெழுத்து போட்டதை கண்டித்து வாக்குவாதம் செய்த மகள்...
author img

By

Published : Jun 20, 2023, 1:25 PM IST

ஜாங்கோன்: “ஜனாகமாவின் அரசன் என்று சொல்லிக் கொள்ளும் தாங்கள், ஏன் எனது கையெழுத்தை போலியாகப் போட்டு முறைகேட்டில் ஈடுபட்டீர்கள்?” என்று பொதுவெளியில் ஜாங்கோன் தொகுதி எம்எல்ஏ முத்திரெட்டி யாதகிரி ரெட்டியிடம், அவரது மகள் துல்ஜா பவானி ரெட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜாங்கோன் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் முத்திரெட்டி யாதகிரி ரெட்டி. தெலங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், வத்லகொண்டா பகுதியில் நேற்று (ஜூன் 19) ஹரிதோட்சவம் என்ற பெயரில், தொகுதி மக்களுடனான சந்திப்பு முத்திரெட்டி யாதகிரி ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நிறைவடையும் தருவாயில், அவரின் மகள் துல்ஜா பவானி ரெட்டி மற்றும் துல்ஜாவின் கணவர் உள்ளிட்டோர் அங்கு வந்து சேர்ந்தனர். செர்யாலா பகுதியில் உள்ள 1200 யார்ட்ஸ் அளவிலான நிலம், தன் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது ஏன் என துல்கா கேள்வி எழுப்பி, தந்தையும், எம்எல்ஏவுமான முத்திரெட்டி யாதகிரி ரெட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த பகுதியில், தான் எந்த இடத்தையும் வாங்கவில்லை என்பதை துல்ஜா கூறினார்.

துல்ஜா பவானி ரெட்டி மேலும் கூறியதாவது, “அன்றைய தினத்தில், நான் ஒரே ஒரு ஆவணத்தில் மட்டுமே கையெழுத்திட்டு இருந்தேன். அதுவும் மிரட்டியதாலேயே அந்த கையெழுத்தையும் நான் போட்டு இருந்தேன். எனது கையெழுத்தை போலியாக போட்டதாக யாதகிரி ரெட்டி மீது செர்யாலா காவல் நிலையத்தில் வழக்கு தொடரப் போகிறேன். எம்எல்ஏ செய்த தவறுகளுக்காக, நான் நீதிமன்றப் படிகளை ஏறி வருவதாக துல்ஜா கவலை தெரிவித்து உள்ளார்.

மேலும், “என் மீதுதான் வழக்கு தொடர்ந்து விட்டீர்களே? நான் போலி கையெழுத்து போட்டு உள்ளேனா, இல்லையா என்பதை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்” என்று பதிலளித்தவாறே எம்எல்ஏ முத்திரெட்டி யாதகிரி ரெட்டி, அந்த இடத்தில் இருந்து சென்று விட்டார்.

பின்னர், எம்எல்ஏ அலுவலகத்தில் பேசிய முத்திரெட்டி யாதகிரி ரெட்டி, “அரசியல் எதிரிகள் எனக்கு எதிராக மகளைத் தூண்டி விடுகின்றனர். கடந்த காலத்தில், ஜாங்கோன் மாவட்ட கலெக்டர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டிற்கே என்னை எதுவும் செய்ய இயலவில்லை. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு என் மீது முழு நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றின் குத்தகை ஒப்பந்தம் தொடர்பாக போலி கையெழுத்து போட்டதாக உப்பல் காவல் நிலையத்தில், எம்எல்ஏ முத்திரெட்டி யாதகிரி ரெட்டி மீது அவரது மகள் துல்ஜா பவானி ரெட்டி கடந்த மே 9ஆம் தேதி வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.