பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் கோவிட்-19 பாதிப்பிற்குள்ளாகி பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இவரை மருத்துவமனை ஊழியர்கள் மூவர் ஐசியு வார்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதையடுத்து உடல்நிலை மோசமடைந்து அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் மருத்துவமனையோ கோவிட்-19 காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறி மகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதையடுத்து பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க மாநில நிர்வாகத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்' - பிரதமருக்கு சோனியா கடிதம்