மீரட்: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஜலால்பூர் கிராமத்தில் 30 வயது பட்டியலின இளைஞரை இரண்டு இளைஞர்கள் அடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜலால்பூரைச் சேர்ந்த பிஜேந்திரா என்பவரின் மகன் பிரிஜ்பால் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (அக். 24)இரவு 8 மணியளவில் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களான சோனு மற்றும் சச்சின் ஆகியோர் பிரிஜ்பாலை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று(அக்.25) காலை ஜலால்பூர் கிராமத்தில் பிரிஜ்பால் கண்கள் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தால் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பின்னர் தகவலறிந்து சம்பவ இட்டத்திற்கு வந்த காவல்துறையினர் மோதலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பட்டியலின சமூகத்தினர் இஞ்சௌலி காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: ’மாஞ்சா கயிறு’ கழுத்தில் அறுத்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு