ETV Bharat / bharat

Bodh Mahotsav: கரோனா பரவலுக்கு மத்தியில் பீகாருக்கு படையெடுக்கும் 50 நாடுகளை சேர்ந்த 60,000 பயணிகள் - Tibetan Spiritual Guru

கரோனா பரவலுக்கு மத்தியில் திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா தலைமையில் நடக்கவிருக்கும் போதனை நிகழ்வில் கலந்துகொள்ள 50 நாடுகளை சேர்ந்த 60,000 பயணிகள் பீகார் மாநிலத்துக்கு வருகின்றனர்.

Dalai Lama Gaya event amid Covid cases in bihar

author img

By

Published : Dec 26, 2022, 1:05 PM IST

பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் வரும் டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் "போத் மஹோத்சவ்" என்னும் போதனை நிகழ்ச்சி திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா தலைமையில் நடக்கவிருக்கிறது. அதற்காக தலாய் லாமா பீகார் மாநிலத்துக்கு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 50 நாடுகளை சேர்ந்த 60,000 ஆன்மீக பயணிகள் பீகாருக்கு வருகின்றனர். இதனால் கயா விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. லேசான, காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து 4 வெளிநாட்டு பயணிகள் டிசம்பர் 20ஆம் தேதி கயா விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதன்பின் அவர்கள் போத்கயாவில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 3 பேர் இங்கிலாந்து நாட்டையும் ஒருவர் மியான்மாரையும் சேர்ந்தவர்கள். இதையடுத்து நேற்று (டிசம்பர் 25) டெல்லி விமான நிலையம் வந்த 2 வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாடுகளில் BBV154 வகை கரோனா தொற்று பரவிவருகிறது. சீனாவில் மட்டும் நாளொன்றுக்கு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நேரத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் ஆன்மிக பயணிகளை கொண்டு நடக்கவிருக்கும் தலாய் லாமாவின் போதனை நிகழ்வு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்துவருவோர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருவதால், போதனை நிகழ்வுக்கு தடைவிதிக்கப்படலாம் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சீனப் பயணத்துக்கு பின் உத்தரப் பிரதேச தொழிலதிபருக்கு கரோனா தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.