டெல்லி: டெல்லியில் இருந்து ஜபல்பூர் நோக்கி இன்று (ஜூலை 2) பயணித்த ஸ்பைஸ் ஜெட் விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானத்தின் கேபின் ஏரியாவில் புகை வரத் தொடங்கியுள்ளது.
இதைக் கண்டு விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக, ஜபல்பூர் செல்லாமல் டெல்லியிலேயே மீண்டும் தரையிரக்கம் செய்யப்பட்டது. இதில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது என ஸ்பைஸ் ஜெட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவம் காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறக்கப்பட்டது கடந்த இரு வாரத்தில் இது 5 ஆவது முறை ஆகும். ஜூன் 19 ஆம் தேதி 185 பயணிகளுடன் பயணித்த விமானம் பாட்னாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்தது. இதற்க்கு காரணமாக பரவை ஒன்று எஞ்சின் மீது மோதியது கூறப்பட்டது.
இப்படி ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அவதிக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: 25 அடி பள்ளத்தில் விழுந்த 70 வயது மூதாட்டி பத்திரமாக மீட்பு - கழிவறை சென்றபோது நேர்ந்த விபரீதம்!