டெல்லி: நாட்டில் ஒரே நாளில் இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 72 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் தொற்றால் 5,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றிலிருந்து, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 345 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சத்து 82 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 315 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 ஆக உள்ளது.
நாடு முழுவதும் இது வரை 155.39 கோடி மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73 லட்சத்து 08 ஆயிரத்து 669 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேற்கு வங்க ரயில் விபத்து; 6 பேர் உயிரிழப்பு, 45 பேர் படுகாயம்