இந்தியாவில் டெல்டா வகை கரோனா வைரஸ் போல, கப்பா என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. முதலில் இந்த வகை வைரஸ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் கப்பா வைரஸ் பதிவாகியுள்ளது. இதுவரை ராஜஸ்தானில் 11 பேருக்கு கப்பா கோவிட்-19 தொற்று பாதிப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே, உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா பாதிப்பு பதிவாகியுள்ளதால், அண்டை மாநிலங்களிலும் தொற்று பரவி வருவதை சுகாதாரத்துறை அலுவலர்கள் கூர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
இருப்பினும் டெல்டா வகை கரோனா போல கப்பா தீவிரத்தன்மை கொண்டுதல்ல என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிலவரம்: ஒரே நாளில் 38,792 பேருக்கு பாதிப்பு