இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 94 ஆயிரத்து 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121ஆக உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று (ஜுன் 9) ஒரேநாளில் 17 ஆயிரத்து 321 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக கேரளா மாநிலம் உள்ளது. அங்கு, 16 ஆயிரத்து 204 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நேற்று (ஜுன் 9) மட்டும் 6,148 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 59 ஆயிரத்து 676ஆக உயர்ந்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 493ஆக உள்ளது. தற்போது 11 லட்சத்து 67 ஆயிரத்து 952 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
இதுவரை, மொத்தமாக 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 360 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.