இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 ஆயிரத்து 83 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 21 லட்சத்து 92 ஆயிரம் 576 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
நேற்று (ஆக.14) ஒரேநாளில் 37 ஆயிரத்து 927 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 13 லட்சத்து 76 ஆயிரத்து 15 ஆகப் பதிவாகியுள்ளது. மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 336 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
493 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 493 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 225ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தின விழா: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய பிரதமர்!