இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 33,059 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக கேரளாவில் 31,337 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நேற்று (மே.18) 4,529 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 363ஆக உள்ளது.
தற்போது 32 லட்சத்து 26 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, மொத்தமாக 18 கோடியே 58 லட்சத்து 9 ஆயிரத்து 302 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.