இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்றின் தாக்கம் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. இந்நிலையில் முன்னதாக ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 21 லட்சத்து 17 ஆயிரத்து 826ஆக அதிகரித்துள்ளது.
கேரளா முதலிடம்
கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. குறிப்பாகக் கேரளாவில் நேற்று ஒரேநாளில் 21ஆயிரத்து 445 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
42 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
நேற்று (ஆக.12) ஒரேநாளில் 42 ஆயிரத்து 295 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 13 லட்சத்து இரண்டாயிரத்து 345ஆகப் பதிவாகியுள்ளது.
585 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 585 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 30 ஆயிரத்து 254ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 52 கோடியே 95 லட்சத்து 82 ஆயிரத்து 956 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று (ஆக.12) மட்டும் 57 லட்சத்து 31 ஆயிரத்து 574 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதையும் படிங்க: 2 டோஸ்கள் தடுப்பூசி எடுத்தும் ’டெல்டா ப்ளஸ்’ நோயாளி உயிரிழப்பு!