இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 166 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 10 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று(பிப்.24), ஒரே நாளில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 302ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து 13 ஆயிரத்து 226 ஆக உள்ளது. நாட்டில் தற்போது ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 345 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 176.86 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
அதில், நேற்று மட்டும் 32 லட்சத்து 04 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 96 கோடியே 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 78 கோடியே 51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடியே 88 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ்சும் செலுத்தியுள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: பிப்ரவரி 25 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி?