புதுடெல்லி(Omicron Based News): உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மொத்தம் 11 மாநிலங்களில் 126 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படுள்ளது.
தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 7,081 பேர் புதிததாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதன்முதலில் டெல்லியில் தொடங்கப்பட்ட ஒமைக்ரான் சிகிச்சை மையம்
இந்நிலையில் டெல்லி மாநில அரசு 4 தனியார் மருத்துவமனைகளை ஒமைக்ரான் சிகிச்சை மையங்களாக மாற்றியுள்ளது. ஏற்கெனவே கரோனா தொற்றுக்கான சிறப்பு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒமைக்ரான் சிகிச்சை மையம் முதன் முதலில் டெல்லியில் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சர் கங்கா ராம் மருத்துவமனை, சகேட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை, வசந்த கஞ்சில் உள்ள போர்ட்டிஸ் மருத்துவமனை மற்றும் துக்ளக்பாக்கின் பத்ரா மருத்துவமனை ஆகியவை ஒமைக்ரான் சிகிச்சை மையங்களாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் உலகத்திலும் ஒமைக்ரான் பரவிய விதம்
இதற்கு முன்னதாக லோக் நாயக் ஜெய் பிராகஷ் என்ற அரசு மருத்துவமனையில் மட்டும் ஒமைக்ரான் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 100-ஐ தாண்டியது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஒமைக்ரான் தொற்று உறுதியானது.
கடந்த நவம்பர் 25அன்று தென் ஆப்பிரிக்காவில் முதல் ஒமைக்ரான் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டு உறுதிபடுத்தப்பட்டது. இதன் விவரங்களைக் கூறும் போது இதன் வீரியம் அதிகரித்து B.1.1.529 அளவிற்கு அதிகரித்து இருந்தது. இந்தப் புது வகை கரோனாவிற்கு உலக சுகாதார மையம் 'Omicron' என்று பெயரிட்டது. இது கரோனாவின் புது வகை வைரஸ் எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவிற்கு அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் செல்வது தடுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்தும் எந்தவித போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து வருபவர்களுக்கும் பல விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கன்னட - மராட்டிய அமைப்பினர் மோதல்: 144 தடை; 27 பேர் கைது