டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கரோனாவையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனம், அவசர கால கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. கோவாக்சின் என்று பெயரிடப்பட்ட அந்த தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதியளித்துள்ளது.
குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் - கண்பார்வை இல்லாத தாய் பரிதவிப்பு
தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கரோனா தொற்றையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது கட்ட சோதனைகளை மேற்கொண்டு வரும் பாரத் பயோடெக் 'கோவாக்சின்' தடுப்பூசியின் இடைகால சோதனை முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதில், கோவாக்சின் தடுப்பூசி சாதாரண நிலையில் 78 விழுக்காடு அளவு செயல்திறன் அளிப்பதாகவும், கோவிட்-19 அதீத தாக்கம் இருக்கும் வேளையில், அதன் செயல்திறன் அளவு 100 விழுக்காடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.