புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மே மாதம் 17ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்துள்ளார். தொற்று பரவல் காரணமாக பதவியேற்ற பின் சட்டப்பேரவையில் பொதுமக்களைச் சந்திப்பதைப் பெரும்பாலும் தவிர்த்துவந்தார்.
பெரும்பாலான அரசு விழாக்களில் பங்கேற்கும்போது, கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும் அவர் பேசிவந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு சுகாதாரத் துறை சார்பில் அவரது திலாசுபேட்டை வீட்டில் வைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.