ETV Bharat / bharat

'லிவ்விங் டூ கெதரை ஏற்க முடியாது' - பாதுகாப்பு கோரிய காதலர்களுக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் பதில் - Punjab High Court comments on Live in relationship

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல என பஞ்சாப் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'லிவ்-இன் உறவை ஏற்க முடியாது' - பஞ்சாப் உயர் நீதிமன்றம்

author img

By

Published : May 19, 2021, 6:29 PM IST

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குல்ஸா குமாரி (19), குர்விந்தர் சிங் (22) ஆகியோர் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். எங்கள் காதலுக்கு குல்ஸா குமாரியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி தற்போது ஒன்றாகத் தங்கி வருகிறோம். விரைவில் திருமணம் செய்யவிருக்கிறோம். ஆனால் குல்ஸா குமாரியின் ஆதார் அட்டை முதலான முக்கிய ஆவணங்கள் அவளது பெற்றோரின் வீட்டில் உள்ளது. இதனால் எங்கள் திருமணத்திற்கு தாமதம் ஏற்படுகிறது. அதுவரையில், ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் எங்கள் உயிருக்கு பாதுாப்பு வழங்க வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்.எஸ்.மதன், "திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் உறவு, ஒழுக்கரீதியாகவும், சமூகரீதியாகவும் ஏற்புடையது அல்ல. இதற்கெல்லாம் பாதுகாப்பு வழங்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.