இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்து 667 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 34 ஆயிரத்து 445ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (ஜூன்.24) ஒரேநாளில் 65 ஆயிரத்து 527 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 28 ஆயிரத்து 267ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 329 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 310ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும் 30 கோடியே 79 லட்சத்து 48 ஆயிரத்து 744 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘கோவாக்சின்’ தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற மம்தா கடிதம்!