புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுச்சேரியில் 1,355 நபர்களுக்கும், காரைக்காலில் 171 நபர்களுக்கும், ஏனாமில் 153 நபர்களுக்கும், மாஹேவில் 24 நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாநிலத்தில் 15 ஆயிரத்து 585 நபர்கள் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 ஆயிரத்து 552 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 14 நபர்களும், காரைக்காலில் 1 நபரும், ஏனாமில் 3 நபர்கள், மாஹே ஒருவர் என 19 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 70 ஆயிரத்து 76 நபர்கள் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா: பொதுமக்கள் அச்சம்!
புதுச்சேரி: மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,703 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.