ETV Bharat / bharat

ரூ.400 சம்பள தகராறில் தொழிலாளி கொடூர கொலை! - Crime news

ஹைதராபாத்தில் சம்பள பிரச்னையில் தொழிலாளி ஒருவர் லாரியில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.400 சம்பள தகராறில் தொழிலாளி கொடூர கொலை!

author img

By

Published : Dec 26, 2022, 10:21 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபத்தில் உள்ள பாலா நகர் நர்சாபூர் குறுக்கு சாலையில் வசித்து வந்தவர், பில்லிபுரம் ஸ்ரீனிவாஸ் (35). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காசிராம் மற்றும் பிற தொழிலாளர்கள் உடன் கட்டட வேலை செய்துள்ளார். இதற்காக ரூ.1,200 சம்பளமாக பேசப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் காசிராம் என்பவருக்கு ரூ.800 மட்டுமே ஊதியமாக ஸ்ரீனிவாஸ் வழங்கி உள்ளார். இதனால் நேற்று காலை நர்சாபூர் நடைபாதையில் வைத்து ஸ்ரீனிவாஸ் மற்றும் காசிராம் இடையே மீதம் தர வேண்டிய 400 ரூபாய்க்காக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியினர் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். எனவே இருவரும் கலைந்து சென்றுள்ளனர்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத காசிராம், காலை 10 மணியளவில் ஸ்ரீனிவாஸை சாலையில் வந்த லாரி மீது தள்ளி விட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீனிவாஸ் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302இன் படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்து பிரச்சனையில் தங்கை, மச்சானை ஓட ஓட விரட்டி வெட்டிய அண்ணன் குடும்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.