ETV Bharat / bharat

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்., அழைப்பு! - புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யக்கோரி திங்கள்கிழமை (அக். 11) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

congress planning strike to stop local body elections

author img

By

Published : Oct 10, 2021, 9:58 AM IST

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு புதுவை மாநில காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வார்டு குளறுபடிகளை சரி செய்யாமலும், பண்டிகை காலத்தில் இந்த தேர்தல் நடத்த உள்ளதை கண்டித்தும், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வீ. சுப்பிரமணியன் தலைமையில் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஏ.வீ. சுப்பிரமணியம், புதுவை மாநில உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டார்கள் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுது.

மேலும், புதுச்சேரி தேர்தல் ஆணையரை பணி நீக்கம் செய்யவும் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று (அக்.11) மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.