அஜ்மீர்: நூபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது சொத்துக்கள் அனைத்தையும் வழங்குவதாக அஜ்மீர் தர்காவைச் சேர்ந்த மதகுரு சல்மான் சிஸ்டி பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது அவர் இன்று (ஜூலை 06) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஏஎஸ்பி விகாஸ் சங்வான் இன்று காலை சல்மான் சிஸ்டி கைது செய்யப்பட்டதைப் பற்றி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “குற்றவாளி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து திங்கள்கிழமை இரவு நடவடிக்கை தொடங்கப்பட்டது” என்று தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் அவர் நேற்றிரவு (ஜூலை 05) சல்மான் சிஸ்டி பிடிபட்டார். அவர் குற்ற பின்னனி கொண்டவர் என்று தர்கா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறினார். முகமது நபியை அவமதிக்கும் வகையில் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக இழிவான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி குற்றவாளி ஒரு வீடியோவை வெளியிட்டார் அதில்;
"நீங்கள் அனைத்து முஸ்லீம் நாடுகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். நான் இதை ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து சொல்கிறேன், இந்த செய்தி ஹுசூர் குவாஜா பாபா கா தர்பாரில் இருந்து வருகிறது" என்று அவர் வீடியோவில், முஸ்லிம் பக்தர்களைத் தவிர பல இந்துக்கள் பார்வையிடும் சூஃபி ஆலயத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், ஜூன் 17 அன்று அஜ்மீர் தர்காவின் பிரதான வாயிலில் பேசப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வீடியோ முன்பு புழக்கத்தில் இருந்தபோதிலும், இஸ்லாத்தை அவமதித்ததற்காக பழிவாங்குவதாகக் கூறி, உதய்பூரைச் சேர்ந்த தையல்காரர் கன்ஹையா லால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராஜ்சமந்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இந்த கொலையில் தொடர்புடைய இருவர் காவல் துறையினரிடம் சிக்கினர். இந்த கொலை வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது