ETV Bharat / bharat

கோவர்தன் பூஜை: 8 முறை சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர்

பாரம்பரிய கோவர்தன் பூஜையின் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாட்டையால் அடிவாங்கியுள்ளார். அந்த காணொலி இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. மாநிலம் செழிப்பு, வளம் பெற வேண்டி, இதுபோன்ற வழிபாட்டை அவர் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Chhattisgarh Chief Minister Bhupesh Baghel, whipped with sonta, Govardhan puja, Bhupesh Baghel, பூபேஷ் பாகல், முதலமைச்சர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர், சத்தீஸ்கர் முதலமைச்சர், சவுக்கடி
சவுக்கடி வாங்கிய முதலமைச்சர் பூபேஷ் பாகல்
author img

By

Published : Nov 6, 2021, 3:26 PM IST

ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): கோவர்தன் பூஜையின் போது, ஒரு நபரை சாட்டையால் அடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

கிருஷ்ண புராணக் கதைகளின்படி, கோகுலவாசிகள் தனக்கு பூஜை செய்யாத கோபத்தில், இந்திரன் பெருமழையை பொழியச் செய்கிறார். இடைவிடாத மழையால், மக்கள் அவதிப்படும்போது, கோவர்த்தன கிரியை கிருஷ்ணர் தனது சுண்டு விரலில் தூக்கி நிறுத்தி மக்களை காத்தார். கோவர்த்தன மலையை குடையாக கிருஷ்ணர் உயர்த்தி பிடித்த நாள் கோவர்த்தன பூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் போல், ஜாஞ்சகிரி கிராமத்தில் கோவர்தன் பூஜையில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பங்கேற்றார். மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக முதலமைச்சர் 8 சாட்டையடியின் வலியை தாங்கிக் கொண்டார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த காணொலியில், "முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கைகளை நீட்டி நிற்கிறார். அதன் பிறகு ஒரு நபர் அவரை சாட்டையால் அடிக்கத் தொடங்குகிறார். எட்டு சுற்றுகள் அடித்த பிறகு, சாட்டையால் அடித்த நபர், உணர்ச்சி பெருக்கோடு, பூபேஷ் பாகேலை அணைத்துக் கொள்கிறார்" என்று இருந்தது.

சவுக்கடி முதலமைச்சர் பூபேஷ் பாகல்

இதுபோல சாட்டையால் அடிக்கும் நபர் ஒருவர் மட்டுமே. பரோசா தாக்கூர் என்பவர்தான், வழக்கமாக இதுபோல சாட்டையால் அடித்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக பரோசா தாக்கூர் மரணமடைந்த நிலையில், அவரது மகன் பிரேந்திர தாகூர் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து முதலமைச்சர் பேசுகையில், "பசுக்கள் வழிபடுவது முக்கியம். நமது மண்ணின் அடையாளத்தை பாதுகாப்பதும் அதனை முன்னெடுப்பதும் அனைவரின் கடமையாகும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா 75 - ஒடிசா பழங்குடி மக்களின் நாயகன் லக்ஷ்மன் நாயக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.