சத்தார்பூர் (ம.பி.): நீதிபதியின் உயிரிழப்புக்கு மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள சாகர்-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நீதிபதிகள் மற்றும் ஒருவர் என 3 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது கார் டிராக்டர் மீது மோதியதில் நீதிபதி ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்தில் காயமுற்ற இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நீதிபதியின் மறைவுக்கு மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கூறுகையில், சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் பாதாமல்ஹரா நீதித்துறை நடுவர் ரிஷி திவாரி உயிரிழந்தார். விபத்தில் காயமுற்ற இருவருக்கு குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க : சென்னையில் பட்டபகலில் ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை