ETV Bharat / bharat

'ஆரோக்கிய மந்திர்' ஆகும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்..! திடீர் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு!

Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Central government renames Ayushman Bharat Health and Wellness Centre as Ayushman Arogya Mandir
ஆரோக்கிய மந்திர் ஆகும் ஆயுஷ்மான பாரத் சுகாதார மையங்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 10:50 PM IST

டெல்லி: ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என மறு பெயரிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பெயர்மாற்றத்தைச் செயல்படுத்தக் கடிதம் அனுப்பியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த பெயர் மாற்றப்பட்ட சுகாதார மையங்களின் புகைப்படங்களை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (AB-HWC) போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய மாநிலங்களுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மறுபெயரிடப்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், ஆரோக்கியம் பர்மம் தானம் என்னும் புதிய டேக்லைனையும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பார்த் திட்டம் பாஜக அரசால் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்காக ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டன.

ஏற்கனவே பல மாநிலங்களில் மருத்துவ காப்பீடு திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் போது இந்த திட்டம் எதற்கு என அமல்படுத்தப்பட்ட போது பரவலான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் மாநில அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தை விட மத்திய அரசு வழங்கும் ஆயுஷ்மான் பார்த் திட்டத்தின் காப்பீட்டுத் தொகை அதிகம் இருந்ததாலும், அதிக எண்ணிக்கையிலான நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பார்க்க முடியும் என்பதாலும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய குடும்பங்களுக்கு இந்த திட்டம் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.

இந்தியாவில் சமீபத்தில் ஜி20 மாநாடு நடந்த போது, குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டில் போது உலக சுகாதார மையத்தின் தலைவர் ஆயுஷ்மான் பார்த் திட்டத்தைப் புகழ்ந்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மாதம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 24ஆம் தேதி வரை நோயாளிகள் 211கோடி முறை சிகிச்சை பெற்று இருப்பதாகவும், 183 கோடி முறை இலவச மருந்துகளைப் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயர் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக ஆட்சியிலிருந்த கட்சி அமல்படுத்திய திட்டங்களை அடுத்ததாக ஆட்சிக்கு வரும் கட்சிகள் பெயர் மாற்றம் செய்வது உண்டு. ஆனால் பாஜக கொண்டு வந்த திட்டத்தின் பெயரை பாஜக ஆட்சியிலேயே மாற்றியதன் காரணம் என்ன எனக் குறிப்பிடப்படவில்லை.

இதையும் படிங்க: கொச்சி பல்கலைக்கழக கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நிபுணர் குழு விசாரணை - கேரள அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.