இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று பெரும் பாதிப்பை உருவாக்கிய நிலையில், பல்வேறு குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்துவருகின்றனர்.
இவர்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகளை கொண்டுசேர்க்கும் பணியில் அரசு தொடர்ந்து முனைப்பு காட்டிவருகிறது.
அதன் முக்கிய அம்சமாக சிபிஎஸ்இ அமைப்பு பாதிப்பை எதிர்கொண்ட மாணவர்களுக்கு, இந்தாண்டு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்களித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் ஷியாம் பரத்வாஜ், " கோவிட்-19 பெருந்தொற்று நாடு முழுவதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாணவர்களும் தப்பிக்கவில்லை.
எனவே, கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் மாணவர்களுக்கு உதவும் விதமாக 2021-22 கல்வியாண்டில், பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பதிவு, தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த பட்டியலை சம்பந்தப்பட்ட கல்விநிறுவனங்கள் திரட்டி சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முக்கியச் சந்திப்புகளை எதிர்நோக்கி அமெரிக்கா செல்லும் மோடி!