டெல்லி: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.12) வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, digilocker.gov.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விதிகம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதம். இதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 5.38 சதவீதம் குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 6.01 சதவீதம் அதிகரித்துள்ளது. 90.68 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக, பெங்களூரு மண்டலம் 98.64 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், சென்னை மண்டலம் 97.4 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களிடையே தேவையற்ற போட்டிகளை தவிர்ப்பதற்காக, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணாக்கர்களின் பெயர்களை சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை: திலகவதி ஐபிஎஸ்(ஓய்வு) விசாரணை ஆரம்பம்!