பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை (PMAY-G) அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு (2024 மார்ச் வரை) தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த திட்டத்தின் கீழ் முடிக்கப்பட வேண்டிய 2.95 கோடி வீடுகள் இலக்கை எட்டுவதற்கு ஏற்றவகையில் இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது. எஞ்சிய 155.75 லட்சம் வீடுகளை கட்டி முடிக்க ரூ.2,17,257 கோடி தேவை. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.1,25,106 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.73,475 கோடி.
அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் வீட்டுவசதியை உறுதி செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்