ETV Bharat / bharat

ஸ்ரீநகரில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்! - காஷ்மீர் மருத்துவக் கல்லூரி

ஸ்ரீநகரின் ஷெர் பகுதியில், காஷ்மீர் மருத்துவக் கல்லூரி அருகே பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினர். இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Kashmir Institute of Medical Sciences, Srinagar, security forces, துப்பாக்கிச் சூடு, காஷ்மீர், ஸ்ரீநகர், பயங்கரவாதிகள் தாக்குதல், காஷ்மீர் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீநகரின் ஷெர்
ஸ்ரீநகரில் துப்பாக்கிச் சூடு
author img

By

Published : Nov 5, 2021, 9:32 PM IST

ஸ்ரீநகர்: ஷெர் பகுதியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகரின் ஷெர் பகுதியில், காஷ்மீர் மருத்துவக் கல்லூரி அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

"தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பொதுமக்களையும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளையும் பிடித்து வைத்துக்கொண்டு தப்பியோடுவதற்காக பாதுகாப்புப் படையினரை மிரட்டினர். இதனால் அவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தவில்லை" என்று காவல் துறை உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய பயங்கரவாதிகளை காவல் துறையினரும், இந்திய ராணுவமும் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு; நல்ல புத்தி உள்ளவர்கள் வரவேற்பார்கள்: ஹெச்.ராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.