ETV Bharat / bharat

'சமூக வலைதளங்களில் ராவணன்போல செயல்படும் பாஜக'

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பாஜக இ-ராவணர்களைப் பயன்படுத்தி வெறுப்பையும், பொய் பரப்புரையும் மேற்கொண்டுவருவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்
author img

By

Published : Jul 31, 2021, 4:32 PM IST

இது குறித்து பேசிய அவர், "பாஜக அரசு தனது எதிர்க்கட்சியினர் மீது அவதூறு பரப்ப சமூக வலைதளங்களைப் பயன்படுத்திவருவதால் எனது கட்சியினரை ஒழுக்கமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு வலியுறுத்தி இருக்கிறேன்.

அரக்க மன்னனான ராவணனைப்போல, பாஜக அரசு இ-ராவணர்களைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரையை மேற்கொண்டுவருகிறது. ராவணனைப்போல் அவர்கள் மாறுவேடத்தில் சமூக வலைதளங்களில் உலவி, பொய்களையும், வதந்திகளையும் பரப்பிவருகின்றனர்" என்றார்.

சமூக வலைதளங்களில் கண்காணிப்பு

இவர்கள் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர்களைப்போல தங்களை வெளிப்படுத்திக்கொண்டு வலைதளங்களில் அநாகரிகமான கருத்துகளைப் பரப்பிவருகின்றனர் எனக் குறிப்பிட்ட அகிலேஷ், "இதுபோன்றவர்களைக் கண்காணிக்க எனது கட்சியினரை வலியுறுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

கடந்த வாரம் 25ஆம் தேதியன்று சமாஜ்வாதி கட்சித் தலைமையைப் போன்று ட்விட்டரில் போலியான கணக்குத் தொடங்கியவர்கள் மீது, அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் போலி கணக்கில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்ததும் ராமர் கோயில் இருக்கும் இடத்தில் மசூதி ஒன்று கட்டப்படும் எனப் பதிவிடப்பட்டிருந்தது.

மக்களைத் திசை திருப்பும் பாஜக

இது குறித்து பேசிய அகிலேஷ், "மாநிலத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாஜகவினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஏனென்றால் பொய் பரப்பி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதில் அவர்கள் கைத்தேர்ந்தவர்கள்.

வளர்ச்சிப் பாதையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதே அவர்களின் நோக்கமாகும். நாங்கள் எங்கள் கட்சியினரிடம் சமூக வலைதளங்களில் ஒழுக்கமான மொழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும் பாஜக அதைத் தவறாகப் பயன்படுத்திவருகிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.

350 இடங்களில் வெற்றிபெறுவோம்

"வரும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 350 தொகுதிகளில் வெற்றிபெறும். பாஜகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. நமது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. பாஜகவிடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் மக்களின் குரலாக ஒலிக்கிறோம் " எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 2024 தேர்தலைக் குறிவைத்து மாற்றம்...பிரசாந்த் கிஷோர் கைகளுக்குள் காங்கிரஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.