ETV Bharat / bharat

பிரதமர் மோடிக்கே சவால் விட்ட பாஜக மூத்த தலைவர் - ராஜஸ்தானில் தேர்தல்

பாஜக மூத்த தலைவரும், மத்திய தேர்தல் குழு உறுப்பினருமான ஓம் மாத்தூர், ’தான் போட்ட நங்கூரத்தை பிரதமர் மோடியால் கூட அசைக்க முடியாது’ என சவால்விடும் வகையில் பேசியுள்ளது பாஜகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மோடிக்கே சவால் விடுத்த பாஜக மூத்த தலைவர்

author img

By

Published : Dec 28, 2022, 10:08 PM IST

நாகூர்(ராஜஸ்தான்): ராஜஸ்தானில் 2023-ம் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் களமிறங்கி வேலையைத் தொடங்கியுள்ளன. தேர்தல் ஆர்வலர்கள் மத்தியில், தலைவர்களின் அறிக்கைகளால் அரசியல் களத்தில் விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய தேர்தல் குழு உறுப்பினருமான ஓம் மாத்தூர், கருத்தை தெரிவித்து பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நாகூர் மாவட்டத்தில் பர்பட்சரில் நடைபெற்ற ஆக்ரோஷ் சபையில் உரையாற்றிய ஓம் மாத்தூர், “தன்னை யாராலும் நெருங்க முடியாது. நான் போட்ட நங்கூரம் அப்படி. அதை மோடியாலும் அசைக்க முடியாது” என சவால்விடும் வகையில் பேசினார். ராஜஸ்தானில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தலைவர்களிடையே நிலவும் போட்டியால், கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் ஓம் மாத்தூரின் வெளிப்படையான கருத்து, மாநில பாஜகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பாஜக இளைஞர் அணியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மாத்தூரின் இந்தக் கூற்றின் பல அர்த்தங்களுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதுமட்டுமின்றி அவர் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.