தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவினர் வெற்றி வாகை சூடியது போல், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வெற்றி பெறுவார்கள் என மத்தியப் பிரதேச பாஜக பொறுப்பாளர் பொல்சானி முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தென் மாநிலங்களில் பாஜக ஒரு வலுவான காலடி வைக்க விரும்புகிறது. கேரளாவில் வெல்வது கடினம் என்றாலும், சாத்தியமில்லை என்று கூற முடியாது.
தமிழ்நாட்டில் எங்களுடன் கூட்டணியில் ஆளும் அரசு உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகின் தலைசிறந்த பெண்ணாக வாகை சூடிய தமிழிசை!